மதுரை: நடிகர் வடிவேலு, தனது மகன் சுப்ரமணியனின் திருமணத்தை உறவினர்களை மட்டும் அழைத்து சிம்பிளாக நடத்தி முடித்திருக்கிறார்.
நடிகர் வடிவேலு, தன் மனைவி வழி சொந்தத்தில் தனது மகன் சுப்பிரமணியனுக்கு பெண் பேசி முடித்திருந்தார்.
பெண் வீட்டில் வரதட்சணை எதையும் வாங்காமல், மணமகள் புவனேஸ்வரிக்கு அனைத்து செலவுகளையும் செய்து, திருமண ஏற்பாட்டுகளையும் வடிவேலுவே பார்த்துக்கொண்டார்.
இந்நிலையில், வடிவேலு மகன் சுப்பிரமணியன்-புவனேஸ்வரி திருமணம் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் இன்று காலை நடந்தது. இந்த திருமணத்திற்கு சினிமா பிரபலங்களுக்கோ, அரசியல் தலைவர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. பிரைவேட் செக்யூரிட்டி மூலமாக எல்லோரும் விசாரிக்கப்பட்ட பின்னரே மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
வடிவேலுவின் சொந்த ஊரான ஐராவதநல்லூர் மக்களை மட்டும் திருமணத்திற்கு அழைத்திருந்தார். மேலும், இந்த விழாவில் தெனாலிராமன் பட இயக்குனர் யுவராஜும், அமீரின் உறவினரும், இயக்குனருமான ஆதம்பாவாவும் கலந்து கொண்டார்கள்.
அதேபோல், மணமக்களுக்கு வைத்த வாழ்த்து பேனரிலும் தனது பெயரை தவிர்த்திருக்கிறார் வடிவேலு. மேலும், மணமக்களுக்கு அருகில்கூட செல்லாமல், ஒரு அறைக்குள்ளேயே இருந்து கொண்டாராம் வடிவேலு.
இரண்டு வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசுக்கு பயந்து தனது மகள் திருமணத்தை பிரபலப்படுத்தாமல் எளிமையாக நடத்தினார் வடிவேலு. அதேபோல், தற்போது தனது மகன் திருமணத்தையும் எளிமையாக நடத்தியதன் மூலம் இன்னும் அவருக்குள்ள அரசியல் நெருக்கடிகள் நீங்கவில்லை என்றே தெரிகிறது.
செ.சல்மான்
No comments:
Post a Comment