Saturday, December 6, 2014

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

Photo: எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?
http://bit.ly/1vTQzSq

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன..

சிறப்பு பகிர்வை முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/1vTQzSq

புகையிலைக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து சாட்டையை சுழற்றி வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை மூலம் அரசுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது என்றபோதிலும், அரசு அதனை பொருட்படுத்தவில்லை. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்த உடனேயே தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் சிகரெட் மீது 72 சதவிகித வரியும், பான்பராக் போன்ற போதை பாக்குகள் மீது 70 சதவிகித வரியும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் புகையிலைப் பயன்படுத்துவோரின் வயதுவரம்பை 18ல் இருந்து 25 ஆக உயர்த்தி இருப்பதுடன் பொது இடங்களில் புகைத்தால் விதிக்கப்படும் அபராதத் தொகையையும் பல மடங்கு உயர்த்த திட்டமிட்டிருக்கிறது அரசு. மேலும், சிகரெட்டை ஒன்றிரண்டாக விற்பனை செய்யாமல் பாக்கெட், பாக்கெட்டாக மட்டுமே விற்க வேண்டும் எனவும் விதிமுறை கொண்டு வருவதற்கு ஆலோசனை நடந்து வருகிறது.

அரசு விடாக்கண்டன் என்றால் சிகரெட் கம்பெனிகள் கொடாக்கண்டன்களாக இருக்கின்றன. சிகரெட் விற்பனை என்பதே ஒன்றிரண்டாக விற்பதுதான். பாக்கெட் கணக்கில்தான் வாங்க முடியும் என்றால் பலரும் சிகரெட் வாங்க மாட்டார்கள். வியாபாரம் படுத்துவிடும். இதனால், இப்போது சிகரெட் கம்பெனிகள் வெறும் 2 சிகரெட்டுகளை மட்டும் வைத்து சிறிய பாக்கெட்டுகளை தயாரித்துவிட்டன. பரிசோதனை முறையில் சில நகரங்களில் விற்கப்படும் இந்த 2 சிகரெட்டுகளை கொண்ட பாக்கெட், விரைவில் இந்தியாவின் அனைத்து நகரங்களுக்கும் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

சிகரெட்டை பாக்கெட்டாகத்தான் விற்க வேண்டும் என்று அரசு சொல்வதன் நோக்கமே அதை வாங்குபவர்கள் எண்ணிக்கை குறையும்; அதன்மூலம் புகைப்பவர்களின் எண்ணிக்கையும் குறையும் என்பதுதான். ஆனால் இந்த நிறுவனங்களோ இதற்கும் ஒரு குறுக்குவழி கண்டுபிடித்துவிடுகின்றன. சிகரெட் விற்பனையை தடை செய்யாமல் இப்படிப்பட்ட கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலமும், அச்சுறுத்தும் விளம்பரங்களை வெளியிடுவதன் மூலமும் புகைப்பதை கட்டுப்படுத்திவிட முடியாது.

எரிவதை அணைக்காமல் கொதிப்பது எப்படி அடங்கும்?

- சிபி

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024