சென்னை, மார்ச். 11–
தமிழக சட்டசபை தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட தேர்தல் கமிஷன் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் சார்பில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெசப்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் இன்று மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தமிழக தலைமை தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி பேசியதாவது:–
தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. தமிழக சட்டசபைக்கு மே 16–ந் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
அன்றைய தினம் முதல் பணியாக நீங்கள் ஓட்டுப்போட செல்ல வேண்டும். அதன்பிறகு மற்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய தேர்தல் கமிஷன் முழு முயற்சி செய்து வருகிறது.
இந்த தேர்தலில் முதல் முறையாக சிறையில் இருக்கும் கைதிகள் ஓட்டுப்போட ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் தபால் மூலம் தங்கள் ஓட்டை பதிவு செய்யலாம். தமிழ்நாடு முழுவதும் 13 ஆயிரம் சிறைக்கைதிகள் உள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அரசு ஊழியர்கள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தி.மு.க. சார்பில் தேர்தல் தொடர்பான புகார்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. அதன் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment