ரயிலில் 'சீட்' ஒதுக்கீடு பட்டியல் உண்டு: பின் வாங்கியது தெற்கு ரயில்வே
DINAMALAR
சென்னை: ரயில் பெட்டிகளில், 'சீட்' ஒதுக்கீடு விவர பட்டியலை, மீண்டும் ஒட்டுவது என, தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.
ரயிலில் பயணிக்க, முன்பதிவு செய்யும் பயணிகளின் மொபைல் போன் எண்ணுக்கு, சீட் ஒதுக்கீடு விவரம், எஸ்.எம்.எஸ்., மூலம் அனுப்பப்படுகிறது. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களுக்கு, டிக்கெட் உறுதி செய்யப்பட்ட உடன், தகவல் சென்று விடுகிறது. இதனால், ரயில் பெட்டிகளில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல் ஒட்டும் பணியை, படிப்படியாக நிறுத்த, தெற்கு ரயில்வே முடிவு செய்தது. முதற்கட்டமாக, சென்னை சென்ட்ரல் - பெங்களூரு எக்ஸ்பிரஸ் மற்றும் திருவனந்தபுரம் - டில்லி நிஜாமுதீன் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில்களில், மார்ச் 20ம் தேதி முதல், ஒரு மாதத்திற்கு சோதனை அடிப்படையில், இத்திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவித்தனர்.
இதனால், முன்பதிவு செய்த போது, மொபைல் போன் எண் தராதவர்களில் சிலர், கடைசி நேரத்தில் தவிப்பிற்கு ஆளாகினர். காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள், தங்களுக்கு டிக்கெட் உறுதியாகி விட்டதா என்பதை அறிவதிலும் சிக்கல் ஏற்பட்டது.இதனால், இந்த விஷயத்தில் தெற்கு ரயில்வே பின்வாங்கி உள்ளது. 'இந்த ரயில்களில் சீட் ஒதுக்கீடு விவர பட்டியல், மீண்டும் ஒட்டப்படும்' என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment