Wednesday, March 23, 2016

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

344 மருந்துகளுக்கு விதித்த தடை தொடரும்:மத்திய அரசு உத்தரவுக்கு ஐகோர்ட் 'ஓகே'

DINAMALAR

சென்னை:'ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.தென் இந்திய மருந்து உற்பத்தியாளர் சம்மேளனத்தின் தலைவர் சேதுராமன், தாக்கல் செய்த மனு:பொதுநலன் கருதி
மத்திய சுகாதார துறை, 2016 மார்ச், 10ல் பிறப்பித்த உத்தரவில், 'பிக்சடு டோஸ் காம்பினேசன்' எனப்படும், ஒன்றுக்கு மேற்பட்ட மருந்து கலவைகளை உடைய, 344 வகையான மருந்துகளை தயாரிக்கவோ, விற்கவோ கூடாது' என, தெரிவித்துள்ளது; பொதுநலன் கருதி, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் கூறியுள்ளது.

தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசால் தடை செய்யப்பட்ட இந்த மருந்துகள், பல ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நிபுணர் குழு அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.ரகசியமாக... மருந்து கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ், இந்த குழு அமைக்கப்படவில்லை. அனைத்து நடவடிக்கைகளும், ரகசியமாக வைக்கப்பட்டன. மத்திய அரசு உத்தரவு பொதுநலனுக்கு எதிரானது. ஏனெனில், இந்த மருந்துகளைத் தான், பெரும்பாலும் டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
எனவே, மத்திய அரசின் உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். எங்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு
உள்ளது.
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' மனுவை விசாரித்தது. மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆஜரானார். மத்திய அரசு சார்பில், உதவி சொலிசிட்டர் ஜெனரல் சீனிவாசன், தமிழக அரசு சார்பில், அரசு பிளீடர் மூர்த்தி, 'நோட்டீஸ்' பெற்றனர்.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மத்திய அரசின் உத்தரவுக்கு, டில்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது; விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என, உத்தரவிட்டுள்ளதும், எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தில், நாங்கள் உடன்படவில்லை; அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்க விரும்பவில்லை. பல ஆண்டுகளாக மருந்து விற்பனை நடந்து கொண்டிருப்பதால், அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என, கூற முடியாது. இந்தப் பிரச்னையை ஏற்கனவே, நிபுணர் குழு ஆராய்ந்துள்ளது. அனைத்து நடைமுறைகளும், சட்ட விதிகளும் பின்பற்றப்பட்டனவா என்பது, விசாரணையின் போது ஆராயப்படும். மத்திய அரசு உத்தரவுப்படி, தடை செய்யப்பட்ட மருந்துகளை
விற்கக்கூடாது.ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மருந்துகளை வைத்திருக்கும், உற்பத்தியாளர்கள் மற்றும், 'ஸ்டாக்கிஸ்ட்'கள் மீது, நடவடிக்கை எடுக்கக் கூடாது.இவ்வாறு நீதிபதிகள்
உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...