200 ஜிபி சேமிப்புத்திறன் கொண்ட ஒயர்லெஸ் பென்டிரைவ்; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்
மாலைமலர்
பிளாஷ் ஸ்டோரேஜ் கருவி விற்பனையில் முன்னிலையில் இருந்து வரும் 'சான்டிஸ்க்' நிறுவனம் இந்தியாவில் புதிய ஒயர்லெஸ் பென்டிரைவ் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
200 ஜிகாபைட் சேமிப்புத்திறன் கொண்ட இந்த பென்டிரைவை ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் டிவி என அனைத்துவிதமான டிஜிட்டல் கருவிகளுடனும் பயன்படுத்தலாம்.
பாஸ்வேர்டு பாதுகாப்புடன் வை-ஃபை மூலம் இந்த பென்டிரைவை கனெக்ட் செய்வதால் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அதிவேகமாக டிரான்ஸ்பர் செய்ய முடியும். இதற்காக பிரத்யேகமாக 'ஆப்' ஒன்றையும் 'சான்டிஸ்க்' வழங்கியுள்ளது. முதற்கட்டமாக, ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் மட்டுமே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கடைகளிலும் விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.9,990-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒயர்லெஸ் பென்டிரைவை பயன்படுத்த இண்டர்நெட் அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment