திருமண விழாக்கள், திருவிழாக்களில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படி அகற்றாவிட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் நாளொன்றுக்கு 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் குவிகின்றன. இதில் 9 ஆயிரம் டன் மட்டுமே சேகரிக்கப்படுகின்றன. இதர 6 ஆயிரம் டன் சேகரிக்கப்படாமல் சுற்றுச்சுழலுக்கு பெரும் சீர்கேடுகளை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ‘புதிய பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள் 2016’-ஐ மத்திய அரசு வரையறுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
50 மைக்ரானாக உயர்வு
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லியில் நேற்று கூறியதாவது:
இப்போதைய நிலையில் 40 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டது. புதிய விதியில் இந்த வரம்பு 50 மைக்ரானாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் புதிய விதியில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி திருமணம், திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். இல்லையெனில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் இன்னும் 2 ஆண்டு களில் பயன்பாட்டில் இருந்து முழுமையாக அகற்றப்படும். அங்கீகரிக்கப்பட்ட கடைக்காரர் கள் மட்டுமே பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட வற்றை விற்பனை செய்ய முடியும்.
உணவுப் பொருட்கள் உள்ளிட்டவை பிளாஸ்டிக் உறைகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த பிளாஸ்டிக் உறைகளை மீண்டும் சேகரித்து மறுசுழற்சி செய்ய வேண்டும். இதற்கு பிளாஸ்டிக் உறை தயாரிப்பாளர்கள் மற்றும் அந்த உறையை பயன்படுத் தும் நிறுவனங்கள் முழு பொறுப்பேற்க வேண்டும்.
எந்தெந்த கடைகளுக்கு எவ்வளவு பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்கள் முறையான கணக்கு விவரங்களை பராமரிக்க வேண்டும்.
இதற்கு முன்னர் பிளாஸ்டிக் தொடர்பான கட்டுப்பாடுகள் நகரங்களில் மட்டுமே நடைமுறையில் இருந்தன. புதிய விதிகளின்படி கிராமங்களிலும் பிளாஸ்டிக் கட்டுப்பாடுகள் அமல் செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment