Sunday, March 20, 2016

ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வழங்கும் 2 புதிய வசதிகள்

ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு 'வாட்ஸ் ஆப்' வழங்கும் 2 புதிய வசதிகள்

  தினத்தந்தி


புதுடெல்லி,

ஆன்ட்ராய்டு பயனாளர்களுக்கு பிரபல சமூக வலைத்தளமான 'வாட்ஸ் ஆப்' 2 புதிய வசதிகளை வழங்கியுள்ளது. இம்மாத துவக்கத்தில் வெளியிடப்பட்ட 2.12.535 புதிய அப்டேட்டில் இந்த புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதாவது, கூகுள் டிரைவில் நாம் சேமித்து வைத்துள்ள டாக்குமெண்ட்டுகளை நேரடியாக வாட்ஸ் ஆப் வழியாக இனி ஷேர் செய்யலாம். ஆனால், அவை பி.டி.எப் பைல்களாக இருக்க வேண்டும்.

அதேபோல், வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பும் டெக்ஸ்ட் மெசேஜ்களின் பார்மட்டையும் மாற்றிக் கொள்ளலாம். எழுத்துக்களை போல்டு ஆக்கிக் கொள்ள முடியும். சரிவாகவும் ஆக்க முடியும். அண்டர்ஸ்கோர் மற்றும் ஆஸ்டிரிச் குறியீடுகளை எழுத்துக்களிடையே சேர்க்கலாம். எனினும், நாம் செய்யும் இந்த மாற்றங்கள் அடங்கிய மெசேஜை மற்றவரும் இதே புதிய வாட்ஸ் ஆப் வெர்ஷனை பயன்படுத்தினால் மட்டுமே பார்க்க முடியும்.

கூகுள் பிளே ஸ்டோரில் இன்னும் இந்த வெர்ஷன் வெளியிடப்படவில்லை.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024