Sunday, March 20, 2016

விரைவு ரயில் வருகை, புறப்பாடு விவரம்: செல்போன் மூலம் அறிய புதிய வசதி

THE HINDU TAMIL

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப் படும், வந்தடையும் விரைவு ரயில்களின் நடை மேடை (பிளாட்பார்ம்) எண் தொடர்பான தகவல் களை செல்போன் மூலம் தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே புதிய வசதியை தொடங்கி யுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும், வந்தடையும் விரைவு ரயில்கள் நடைமேடை எண் தொடர்பாக செல்போன் மூலம் தெரிந்து கொள்ள புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, ஏடி டைப் செய்து, சிறிது இடைவெளி விட்டு விரைவு ரயில் எண் டைப் செய்ய வேண்டும். பின்னர் சிறிது இடைவெளி விட்டு நகரத்தின் எஸ்டிடி எண்ணை டைப் செய்து 139 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் (குறுந்தகவல்) அனுப்பினால் சம்பந்தப்பட்ட விரைவு ரயில் தொடர்பாக தகவல் வந்தடையும்.

இதேபோல், விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன்கள் பயன்படுத்துவோர் பிளேஸ்டோ ருக்கு சென்று என்டிஇஎஸ் என்ற ரயில்வே தகவல் மையத்தின் செயலி டவுன்லோடு செய்து பிஎன்ஆர் எண் மூலம் பதிவு செய்து விரைவு ரயில்கள் தொடர்பான தகவல்களை பெறலாம். குறிப்பாக ரயில்கள் ரத்து, ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம், ரயில்கள் நேரம் மாற்றம் ஆகிய தகவல்களை பெற முடியும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024