Sunday, March 20, 2016

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற புதிய விதிமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வதற்கு முகவரிக்கான ஆவணமாக குடும்ப அட்டை இனி ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்ற புதிய விதிமுறை ஏப்ரல் முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து திருச்சி மண்டல பாஸ்போர்ட் அதிகாரி எஸ்.லிங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பம் செய்பவர்கள் விண்ணப்பத்துடன் இணைக்கவேண்டிய ஆவணங்கள் பற்றிய விவரங்கள் இணையதள முகவரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்று ஆவணமாக குடும்ப அட்டையும் (ரேஷன் கார்டு) இடம் பெற்றிருந்தது.

தற்போது முகவரிக்கான சான்றாவணத்தில் இருந்து குடும்ப அட்டை நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் நுகர்வோர், உணவு மற்றும் பொது வினியோக துறை கடந்த 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி வெளியிட்ட அரசாணையில் குடும்ப அட்டை வினியோகம் செய்யப்படுவது உணவு பொருட்கள் வாங்குவதற்காக தான்.

அதனை அடையாள அட்டை மற்றும் முகவரிக்கான ஆவணமாக பயன்படுத்தக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த ஆணையை இந்திய வெளி விவகார துறை ஏற்றுள்ளது. இதன் அடிப்படையில் குடும்ப அட்டையை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இந்த புதிய விதிமுறை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் குடும்ப அட்டையின் நகலை அடையாளம் மற்றும் முகவரிக்கான ஆவணமாக இணைக்கவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty

NMC task force launches online survey to assess mental health of medical students, faculty Disability researcher Dr Satendra Singh questione...