Friday, March 10, 2017

நெடுவாசல் போராட்டம் வாபஸ்

புதுக்கோட்டை: நெடுவாசலில், 22 நாட்களாக நடந்த போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டது.புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசல் கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுக்க, மத்திய அரசு அனுமதி வழங்கியதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கோவில் உட்பட, 60 கிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். நேற்று, 22வது நாளாக போராட்டம் நீடித்தது. நேற்று, மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், கிராம மக்களை சந்தித்து, பேச்சு நடத்தினார். அப்போது, 15 அல்லது 16ம் தேதி, பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து, பேச்சு நடத்த ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இதையடுத்து, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024