Friday, March 3, 2017

ரயில் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

புதுடில்லி: இடைத்தரகர்களை ஒழிக்கும் வகையிலும், ஒருவர் பெயரில் வேறொருவர் பயணம் செய்வதை தடுக்கும் வகையிலும், 'ஆன்லைன்' முன்பதிவுக்கு, ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது.வரும், 2017 - 18 நிதியாண்டுக்கான, ரயில்வேயின் திட்டங்களை, ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுரேஷ் பிரபு, நேற்று வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள்:வரும், ஏப்., 1 முதல், மூத்த குடிமக்களுக்கான சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல், இடைத்தரகர்கள் அதிக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை தடுக்கவும், போலியான பெயர்களில் முன்பதிவு செய்வதை தடுக்கவும், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதற்கு ஆதார் கட்டாயமாக்கப்படுகிறது. அதன்படி, ரயில்வேயின் இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கு, ஆதாரை குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 6,000, 'பாயின்ட் ஆப் சேல்' எனப்படும், டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் கருவிகள் வழங்கப்படும். இதைத் தவிர, ஆயிரம் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களும் நிறுவப்படும். ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வதற்காகவும், மற்ற சேவைகளை பெறுவதற்காகவும், வரும் மே மாதத்தில், புதிய, 'மொபைல் ஆப்' அறிமுகம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024