Tuesday, March 7, 2017

hyderabad international airport

ஐதராபாத் விமானநிலையம் உலகளவில் முதலிடம்!


சிறந்த சேவைகளை பயணிகளுக்கு வழங்குவதில் உலகளவில் முதல் இடத்தை தட்டிச் சென்றுள்ளது ஐதராபாத் சர்வதேச விமான நிலையம். 9 வருடமாக செயல்பட்டு வரும் ஐதராபாத் விமானநிலையம் வருடத்திற்கு 12 மில்லியன் பயணிகள் வந்து செல்வதற்கான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டது. பிறகு 2016-ம் ஆண்டில் 15 மில்லியன் பயணிகள் வந்து செல்லும் அளவிற்கு வளர்ந்தது. இந்நிலையில் சர்வதேச விமான நிலைய கவுன்சில் நடத்திய சிறந்த சேவையை மக்களுக்கு அளிக்கும் விமான நிலையங்களின் தரப்பட்டியலில் அந்த ஐதராபாத் விமான நிலையமானது 5-க்கு 4.9 அளவீடு பெற்று உலகிலேயே முதலிடத்தை தட்டிச் சென்றிருக்கிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024