Sunday, January 7, 2018

2017ம் ஆண்டில் வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிய பட்ஜெட் மொபைல் போன்கள்

Published : 06 Jan 2018 14:45 IST


லினோவா கே8 பிளஸ், மோட்டோ சி பிளஸ் உள்ளிட்ட பட்ஜெட் மொபைல்கள், 2017ம் ஆண்டில் வாடிக்கையாளர்களால் அதிகம் விரும்பி வாங்கப்பட்டதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் விற்பனை நிறுவனமான பில்ப்கார்ட் நிறுவனம் கடந்த ஆண்டில் தனது விற்பனையை ஆய்வு செய்து தகவல் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

‘‘கடந்த ஆண்டில் மொபைல் போன் விற்பனை மிதமான அளவில் இருந்துள்ளது. குறிப்பாக பட்ஜெட் வகை மொபைல் போன்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

லினோவா கே8 பிளஸ் மொபைல் போன் கடந்த செப்டம்பர் மாதம் அறிமுகமானது. 10,999 ரூபாய் விலையுள்ள இந்த மொபைல் போன் பெருமளவு வாடிக்கையாளர்களை கவர்ந்தது அதுபோலவே, ரூ. 6,999 விலையில் ஜூன் மாதம் அறிமுகமான மோட்டோ சி பிளஸும் விற்பனையில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தது.

இரட்டை சிம்கார் பயன்படுத்தும் வசதி கொண்ட ஸியோமி நோட் 4 மற்றும் ஸியோமி எம்ஐ ஏ1 ஆகியவை ஒரளவு வாங்கும் சக்தி கொண்ட வாடிக்கையாளர்களால் மிகவும் விரும்பி வாங்கப்பட்ட மொபைல் போன்களாகும்.

ஸியோமி ரெட்மி நோட் 4 போன், 9,999 ரூபாய் விலையுடன் ஜனவரியில் அறிமுகமானது. 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் திறனும் கொண்ட இந்த போன், வாடிக்கையாளர்களால் அதிகஅளவில் விரும்பப்பட்டது.

கூகுள் பிக்ஸல் 2, மற்றும் 2 எக்ஸ்எல் போன்களும், ஐபோன் எக்ஸ் போன்றவையும் ஒரளவு விற்பனையாகின. சாம்சங் எஸ்7ம் இதனுடன் போட்டியிட்ட போன்களில் ஒன்று.

பார்ப்பதற்கு மிகவும் அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட ஐபோன் எக்ஸ், 2017ம் ஆண்டின் கவர்ச்சிகரமான மொபைல் போனாக விளங்கியது. இதுபோலவே, சாம்சங் எஸ்8 மற்றும் சாம்சங் எஸ் 8 பிளஸ், எம்ஐ மிக்ஸ் 2, மோட்டோ எக்ஸ் 4 ஆகிய மொபைல் போன்களும் வாடிக்கையாளர்களை மிகவும் கவர்ந்த போன்களின் பட்டியலில் இடம் பிடித்தன’’ என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024