தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்வு ; நாளை முதல் அமலுக்கு வருகிறது
2018-01-19@ 20:03:16
சென்னை; தமிழகத்தில் அரசுப் பேருந்துகளின் கட்டணம் உயர்கிறது. பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. வெளியூர் பேருந்துகளில் கட்டணம் 20 சதவீதம் உயர்த்தப்படுகிறது. சாதாரண பேருந்துகளில் 10 கி.மீ வரை ரூ.5 ஆக உள்ள கட்டணம் ரூ.6 ஆகிறது. 30 கி.மீ வரை ரூ.17 ஆக உள்ள விரைவுப் பேருந்து கட்டணம் ரூ.24 ஆக உயருகிறது. குளிர்சாதன பேருந்தில் 30 கி.மீ-க்கான கட்டணம் ரூ.27-லிருந்து ரூ.42-ஆக உயர்த்தப்படுகிறது. அதிநவீன சொகுசுப் பேருந்தில் 30 கி.மீ-க்கு ரூ.21-லிருந்து ரூ.33-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மாநகரப் பேருந்துகளில் இனி குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மாநகரப் பேருந்தில் 20-வது நிலைக்கு கட்டணம் ரூ.12லிருந்து ரூ.19 ஆகிறது. அதே போல 28 நிலைகள் கொண்ட தொலைவிற்கு பேருந்து கட்டணம் ரூ.14-லிருந்து ரூ.23-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதி சொகுசு இடைநில்லா பேருந்து கட்டணம் 30 கி.மீ-க்கு ரூ.18லிருந்து ரூ.27-ஆக உயர்கிறது. வோல்வோ பேருந்தில் கட்டணம் 30 கி.மீக்கு ரூ.33-லிருந்து ரூ.51-அக உயர்கிறத. இந்த கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment