Wednesday, January 10, 2018

மீண்டும் புழக்கத்தில் ஒரு ரூபாய் நோட்டுக்கள்!

 
புதிய ஒரு ரூபாய் நோட்டுக்கள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் புழக்கத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட ரூ.500, ரூ.1000 பணமதிப்பழிப்பிற்கு பிறகு, புதிதாக ரூ.2 ஆயிரம், ரூ.500, ரூ.200, ரூ.50, ரூ.10 என புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்தது. இந்நிலையில், கடந்த மே மாதம் புதிய ஒரு ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் விட இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. அதன்படி தற்போது, புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்துக்கு வந்துள்ளன. பழைய வடிவமைப்பையே புதிய ஒரு ரூபாய் நோட்டுகளும் ஒத்திருந்தாலும், பச்சை வண்ணத்தில் இருக்கின்றன.

பொதுவாக 10 ரூபாய் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வெளியிடும். அதில், ரிசர்வ் வங்கி ஆளுநரின் கையெழுத்தும் இடம்பெற்றிருக்கும். ஆனால், ஒரு ரூபாய் நோட்டை இந்திய அரசே நேரடியாக வெளியிடும். அதில், மத்திய நிதித்துறை செயலாளரின் கையெழுத்து இடம்பெற்றிருக்கும்.

அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஒரு ரூபாய் நோட்டில் அப்போதைய மத்திய நிதித்துறை செயலாளர் சக்திகாந்த் தாசின் கையெழுத்தும் இடம்பெற்றுள்ளது. நோட்டின் வலது பக்க அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் எண்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், நோட்டின் பின்புறத்தில் அச்சான ஆண்டும் (2017) வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சிடும் முறை 1994ஆம் ஆண்டுடன் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, ஒரு ரூபாய் நாணயங்களே புழக்கத்தில் இருந்து வந்தன. படிப்படியாக பழைய ஒரு ரூபாய் நோட்டுகள் காணாமல்போன நிலையில், 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது. இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...