Friday, January 19, 2018

வாட்ஸ்அப் பயனர்கள் பாதுகாப்புக்கான அப்டேட்!

 
வாட்ஸ்அப் நிறுவனம் பயனர்களின் தகவல் பாதுகாப்புக்காகவும் போலியான
தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்காகவும் புதிய அப்டேட் ஒன்றை வழங்க உள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் போலி தகவல்களைத் தடுக்க முயற்சி செய்துகொண்டிருக்கும் வேளையில், அதன் கட்டுப்பாட்டில் உள்ள வாட்ஸ்அப் செயலியிலும் அதை அமல்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி ஒரு குறிப்பிட்ட தகவல் பல்வேறு நபர்களுக்கு அனுப்பப்படும் பட்சத்தில் அந்தத் தகவலை உறுதிபடுத்தக் கோரியும், அந்தச் செய்தி எத்தனை நபர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது என்ற தகவல்களையும் பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் காண்பிக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இதனால் அந்தத் தகவல் ஸ்பேம் ஆக இருக்கும்பட்சத்தில் அதைப் பயனர்கள் தவிர்த்துவிட முடியும், அதேசமயம் அது உண்மையான தகவல் என்றால் பயனர்கள் தங்கள் நண்பர்களுக்கு அதைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும், ஒரு செய்தியை பலருக்கும் அனுப்ப, செயலியில் உள்ள பிராட்காஸ்ட் லிஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்த வாட்ஸ்அப் செயலின் மூலம் பயனர்களுக்கு நினைவூட்ட அந்நிறுவனம் முயற்சி மேற்கொள்ள உள்ளது.

இந்த புதிய அப்டேட் தற்போது பீட்டா வெர்ஷனாக வெளியாகி சோதனை செய்யப்பட்டு வருகிறது என்றும், விரைவில் அனைத்துப் பயனர்களும் பயன்படுத்தும் வகையில் இந்த அப்டேட் வெளியாகும் என்றும் ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024