Monday, January 8, 2018

என் பாதையில்: தவிக்கவிட்ட ஆதார்

Published : 07 Jan 2018 10:47 IST
 



மூத்த குடிமகளான நான், பென்ஷன் பணத்தைப் பெறுவதற்கு வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கு ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் சென்று உயிருடன் இருப்பதற்கான ‘லைஃப் சர்டிஃபிகேட்’ (வாழ்வுச் சான்றிதழ்) தர வேண்டும். முன்பெல்லாம் ஒரு படிவம் தருவார்கள். அதில் நமது விவரங்களைத் தெளிவாக எழுதித் தந்தாலே போதும். ஆனால், கடந்த ஆண்டு முதல் ஆதாருடன் இணைத்துவிட்டதால் ஆதார் எண்ணைத் தந்து கைரேகையைப் பதித்து அதைச் சரிபார்த்து உறுதி செய்யப்பட்ட பின் நம் வங்கிக் கணக்குடன் இணைத்துவிடுவார்கள். ஒவ்வொரு மாதமும் பென்ஷன் நம் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும்.

நவம்பர் முதல் வாரம் மிகவும் கூட்டமாக இருந்ததால் நான் சில நாட்கள் கழித்துச் சென்றேன். என் கைரேகையைப் பதிந்தபோது மேட்ச் ஆகவில்லை எனச் சொன்னதால் கையைத் தண்ணீரில் தொட்டுத் துடைத்துப் பிறகு வைத்தேன். அப்போதும் மேட்ச் ஆகவில்லை என்றே வந்தது. என்ன செய்வது எனக் கேட்டதற்கு பென்ஷன் ஆபீஸுக்குச் சென்று கண் விழித்திரை சோதனை சரிபார்த்து உறுதிசெய்துகொள்ளலாம் என்றனர்.

எங்கள் வீட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் இருந்த ஆபீஸுக்குச் சென்றால் என்னைப் போலவே நிறையப் பேர் கைரேகை மேட்ச் ஆகவில்லை என வந்திருந்தனர். அவர்களுடன் பேசியபோது பனிக்காலம் என்பதால் கை தோலுரிகிறது, கைரேகை தேய்ந்துவிட்டது எனவும் ஆதார் எடுத்தபோதே 20 சதவீதம் மட்டுமே காட்டியதால் மேட்ச் ஆகவில்லை எனவும் சொன்னார்கள். இது போன்ற பிரச்சினை மூத்த குடிமக்களுக்கு ஏற்படுவது இயற்கையே. அதற்காக அருகில் இருக்கும் வங்கியைவிட்டுத் தூரத்தில் உள்ள பென்ஷன் ஆபீஸைத் தேடிப் போவதும் சிரமமே.

தங்களது வசதிக்காகத்தான் அருகில் இருக்கும் வங்கியை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். அதிலேயே ஆதாருக்கான கண்விழி சரிபார்ப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துவிட்டால் மூத்த குடிமக்களுக்கு உதவியாக இருக்கும். ஒருவரின் உதவியையும் எதிர்பார்க்காமல் தங்களது வேலையைச் செய்துகொள்வார்கள். இனி வரும் காலத்தில் வங்கியில் புதிய கணக்கு ஆரம்பிக்கவும் மற்ற தேவைகளுக்கும் ஆதார் வெரிஃபிகேஷன் தேவையெனில் எங்களைப் போன்ற மூத்த குடிமக்களையும் மனதில் கொண்டு கண்விழி சரிபார்க்கும் வசதியை எல்லா வங்கிகளும் செய்துகொண்டால் நல்லது.

ஆதார் இணைப்பு, டிஜிட்டல் இந்தியா நல்லதே. ஆனால், இந்தியாவில் மூத்த குடிமக்களும் வாழவேண்டும்தானே?

- பெ . பானுமதி, சேலம்.

No comments:

Post a Comment

Man submits fake NEET cert at AIIMS, held

Man submits fake NEET cert at AIIMS, held  TIMES OF INDIA 28.10.2024  Ramanathapuram : Ramanathapuram district police have arrested a 22-yea...