மூத்த குடிமக்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களை அறிவித்த காப்பீட்டு நிறுவனங்கள்!
விகடன் 1 hr ago
மூத்த
குடிமக்கள் தங்கள் ஓய்வுக் காலத்தை நிதிச் சிக்கல் இல்லாமல் இனிமையாகக்
கழிக்க வேண்டும், ஓய்வூதிய சேமிப்புக்கு உரிய பலன் கிடைக்க வேண்டும்
என்பதற்காக, மத்திய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது.
இதன் ஒரு பகுதியாக மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பு ஓய்வூதிய
திட்டத்தை கடந்த ஆண்டு தொடங்கியது. மேலும், இதில் மேற்கொள்ளப்படும்
முதலீட்டுக்கு அதிக வட்டியும் வழங்குகிறது. இதே போன்று மூத்த குடிமக்களின்
நலனுக்காகக் காப்பீடு நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தபால் நிலையம்
சிறப்பான ஓய்வூதிய முதலீட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. அதன்
விவரம்.
`பிரதான்
மந்திரி வாய வந்தனா யோஜனா' ஓய்வூதியத் திட்டத்தின் முதலீட்டு வரம்பை,
தற்போதைய அளவான ரூ.7.5 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரித்து மத்திய
அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், இந்தத் திட்டத்தில்
மேற்கொள்ளப்படும் முதலீட்டுக்கு 8 சதவிகித உறுதியான வட்டி வழங்கப்படும்
என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தேதி தாக்கல்
செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கான பிரதான் மந்திரி வாய
வந்தனா யோஜனா திட்டத்தில் முதலீடு வரம்பு உயர்த்தப்படும் என
அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இந்த முடிவு
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது
வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மூத்த குடிமக்களுக்காகச்
செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்களில் முதலீட்டு வரம்பு 15 லட்சம்
ரூபாயாக உள்ளது. தற்போது, இதற்கு இணையாக பிரதான் மந்திரி வாய வந்தனா
யோஜனா ஓய்வூதியத் திட்டத்திலும் முதலீட்டு வரம்பு 15 லட்சம் ரூபாயாக
அதிகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பிரதான் மந்திரி
வாய வந்தனா யோஜனா ஓய்வூதியத் திட்டத்தின் கால அளவும் 2020-ம் ஆண்டு மார்ச்
31-ம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கடந்த ஆண்டு மே
மாதம் தொடங்கப்பட்டது. இதுவரை 2.20 லட்சம் மூத்த குடிமக்கள், இந்தத்
திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
60
வயதை எட்டிய மூத்த குடிமக்களுக்காக எல்.ஐ.சி-யால் செயல்படுத்தப்படும்
இந்தத் திட்டத்தில், ஒருவர் 15 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 10
ஆண்டுகளுக்கு மாதம்தோறும் 10,000 ரூபாய் ஓய்வூதியமாகக் கிடைக்கும். மூத்த
குடிமக்கள் 7.50 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம்தோறும் 5,000
ரூபாய் ஓய்வூதியம் பத்து ஆண்டுகளுக்குக் கிடைக்கும். இந்தத் திட்டத்தில்
செய்யப்படும் முதலீட்டுக்கு வருமானவரி விலக்கு இல்லை. இந்தத் திட்டத்தில்
முதலீடு செய்துள்ள மூத்த குடிமக்கள் பத்து ஆண்டுகளுக்கு முன்பு
இறந்துவிட்டால், அவரின் பயனாளிக்கு அவர் எந்தத் தொகைக்கு பாலிசி
எடுத்துள்ளாரோ அந்தத் தொகை வழங்கப்படும்.
இந்த
ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்கள், ஓய்வூதியத்தை
மாதம்தோறும், கால் ஆண்டுக்கு ஒருமுறை அல்லது அரை ஆண்டுக்கு ஒருமுறை
பெற்றுக்கொள்ளவும் வசதி உள்ளது. பாலிசி முடிவடையும் காலத்துக்கு முன்பாக
கணவன் அல்லது மனைவிக்கு உடல் நலன் மிகவும் பாதிக்கப்பட்டு விலக நேரிட்டால்,
பாலிசி எடுத்த தொகையிலிருந்து 98 சதவிகிதம் திருப்பி அளிக்கப்படும்.
இதில் 8 சதவிகிதம் உறுதியான வட்டி வழங்கப்படும். மேலும், இதில் முதலீடு
செய்தால் 75 சதவிகிதக் கடனும் பெறலாம். இந்தக் கடனுக்கான தொகை, பாலிசி
தொகை மூலம் பெறப்படும்.
வங்கிகள்
மற்றும் தபால் நிலையங்கள், மூத்த குடிமக்களுக்காகச் சிறப்பு சேமிப்புத்
திட்டங்களை வைத்துள்ளன. இந்தச் சேமிப்பு திட்டக் கணக்குகள் அங்கீகாரம்
பெற்ற வங்கி தபால் நிலையங்களில் தொடங்க முடியும். இந்தச் சேமிப்புத்
திட்டத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 8.3
சதவிகிதம் வட்டி வழங்கப்படுகிறது. 60 வயதுடைய மூத்த குடிமக்கள்
ஒன்றுக்கும் மேற்பட்ட சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்ய முடியும்.
மேலும், 15 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம். வி.ஆர்.எஸ் பெற்ற 55 வயது
முதல் 60 வயதுடைய மூத்த குடிமக்களும் இந்தச் சேமிப்புத் திட்டத்தில்
முதலீடு செய்யலாம். ஆனால், அவர்களின் ஓய்வு பலன்கள் கிடைத்த ஒரு
மாதத்துக்குள்ளாகவும், அவர்களின் முதலீடு ஓய்வு பலன்களைவிட அதிகமாகவும்
இருக்கக் கூடாது
.
வங்கி மற்றும் தபால்
நிலையங்களில் செய்யப்படும் மூத்த குடிமக்கள் செய்யும் முதலீடுகள் வருமான
வரிச் சட்டம 1961, பிரிவு 80சி-யின் கீழ் விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும், சேமிப்புக் கணக்கு தொடங்கும்போதே அல்லது தொடங்கிய பிறகோ
வாரிசுதாரரை நியமிக்கும் வசதியும் உள்ளது. இந்தச் சேமிப்புத் திட்டத்தின்
கீழ் ஒருவர் எத்தனை கணக்குகளும் தொடங்கலாம். ஆனால், முதலீட்டுத்தொகை
முதலீட்டு வரம்புக்குள் இருக்க வேண்டும். ஜாயின்ட் அக்கவுன்ட், மனைவி உடன்
சேர்ந்துதான் தொடங்க முடியும். இந்தத் திட்டம் முதிர்வடைந்த பிறகு மேலும்
மூன்று ஆண்டுகளுக்குக் காலநீடிப்பு செய்யும் வசதி உள்ளது. இதற்கு, இந்தச்
சேமிப்புத் திட்டம் தொடங்கி ஓர் ஆண்டு நிறைவடைந்தவுடன் விண்ணப்பிக்க
வேண்டும்.
காப்பீட்டு
நிறுவனங்கள் செயல்படுத்தும் திட்டங்களில், மூத்த குடிமக்கள் ஒரு பெரிய
தொகையை முதலீடு செய்தால் வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் கிடைக்கும்
வகையில் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், இந்தத் திட்டத்தின் கீழ் மனைவி
மற்றும் குழந்தைகளுக்கும் பென்ஷன் கிடைக்க வழிவகை செய்கிறது. ஆனால், இந்தத்
திட்டத்திலிருந்து கிடைக்கும் பலன்கள் மிக குறைவே. மேலும், இந்தத்
திட்டங்களில் வட்டிவிகிதம் 6-7 சதவிகிதமாகவே உள்ளன. இந்தத் திட்டங்களுக்கு
வருமானவரியிலிருந்து விலக்கும் அளிக்கப்படுவதில்லை. எனவே, இந்தத்
திட்டங்கள் காப்பீட்டு நிறுவனங்களுக்கு முக்கிய வர்த்தகமாக இருப்பதில்லை.
வங்கிகள் மூத்த குடிமக்களின் ஃபிக்ஸெட் டெபாசிட் முதலீடுகளுக்குக்
கூடுதல் வட்டி அளித்துவருகின்றன. இதில் குறிப்பாக, எஸ்.பி.ஐ வங்கி, மூத்த
குடிமக்களின் 5-10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்ஸெட் டெபாசிட்களுக்கு 7.25
சதவிகித வட்டி வழங்குகிறது. எனவே, மூத்த குடிமக்கள் தங்கள் ஓய்வூதியப்
பலனில் ஒரு பகுதியை பிரதான் மந்திரி வாய வந்தனா யோஜனாவில் முதலீடு செய்வது
மிகவும் சிறந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment