கடலைப் பொட்டலம்- இனி சிங்கப்பூர் ஏர்லைன்ஸில் இல்லை
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் தமது பயணிகளுக்குக் கடலைகளைச் சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த குழந்தை ஒன்றுக்கு, கடலையால் ஒவ்வாமைப் பிரச்சினை ஏற்பட்டது.
உடனடியாக, அந்தக் குழந்தை வாந்தி எடுக்கத் தொடங்கியதாகவும், அதன் கண்கள் வீங்கியதாகவும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
அதனையடுத்து,
அந்தச் சம்பவம் குறித்துப் பரிசீலித்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம்,
பயணிகளுக்குக் கடலைகளை சிற்றுண்டியாக வழங்கும் நடைமுறையை நிறுத்திக்கொள்ள
முடிவெடுத்தது.
No comments:
Post a Comment