Tuesday, May 1, 2018

சிங்கப்பூர் சென்ற அதிகாரிகளிடம் அறிக்கை கேட்கிறது தமிழக அரசு

Added : மே 01, 2018 01:56

போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி குறித்து, சிங்கப்பூரில் நடந்த சர்வதேச மாநாட்டுக்கு சென்ற, சென்னை பெருநகர் வளர்ச்சி குழும அதிகாரிகளை, அது தொடர்பான புதிய திட்டங்களுக்கான அறிக்கை அளிக்குமாறு, தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.நகர்ப்புற வளர்ச்சி தொடர்பாக, வெளிநாடுகளில் நடத்தப்படும் பல்வேறு மாநாடுகளுக்கு, தமிழகத்தில் இருந்து, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் சென்று வருவது வழக்கம். இவ்வாறு சென்ற அதிகாரிகள், அங்கு அறிந்த விஷயங்கள் அடிப்படையில், புதிய திட்டங்களை, அரசுக்கு பரிந்துரைப்பது இல்லை.இதனால், இதற்கு ஆகும் செலவுகள், பயிற்சி மேம்பாடு என்ற கணக்கில் எழுதப்படுவதுடன், நிறுத்திக் கொள்ளப்படுகிறது. இதில், சில கண்காணிப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு துவக்கியுள்ளது.இதன்படி, போக்குவரத்து சார்ந்த வளர்ச்சி என்ற தலைப்பில், சர்வதேச மாநாடு, மார்ச் மாதம், சிங்கப்பூரில் நடந்தது. இதில் பங்கேற்க, சி.எம்.டி.ஏ.,வில் இருந்து, சீப் பிளானர்கள் என். உஷா, என்.கனகசபாபதி, சீனியர் பிளானர்கள், என்.எஸ்.பெரியசாமி, ஏ.கிருஷ்ணகுமார் ஆகியோர் சென்றனர்.அந்த மாநாட்டில் அறிந்த விஷயங்கள் அடிப்படையில், தமிழக சூழலில் செயல்படுத்த கூடிய திட்டங்களை, அரசின் திட்டமிடல் மேம்பாடு மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்க துறைக்கு, அறிக்கையாக அனுப்ப, தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment

PhD aspirants demand online availability status of guides

PhD aspirants demand online availability status of guides Ardhra.Nair@timesofindia.com  26.11.2024 Pune : Citing difficulties in application...