Tuesday, May 1, 2018

அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீடு : இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பு

Added : மே 01, 2018 00:28

மதுரை : அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடுத் திட்டத் தால், இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு இழப்பு ஏற்படுவதாக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு, சம்பளத்தில் பிரீமியத் தொகைபிடித்தம் செய்யப்படுகிறது. சிகிச்சைக்கு பின், மருத்துவச் செலவு தொகையை ஈடு செய்ய, மருத்துவ செலவு தொகையை திரும்ப வழங்கக் கோரி, சிலர் அரசிடம் விண்ணப்பித்தனர். அவை நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் விசாரித்தார். யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன, தலைமை திட்ட அலுவலர் ராமகிருஷ்ணன் ஆஜரானார்.இன்சூரன்ஸ் நிறுவன வழக்கறிஞர், 'பிரீமியத் தொகை செலுத்தியதைவிட, கூடுதலாக மருத்துவ செலவு தொகை கோரப்படுகிறது. இதனால், நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. 'விண்ணப்பித்தோரில், 97 சதவீதம் பேருக்கு தொகை வழங்கப்பட்டுள்ளது. அங்கீகரிக்கப்படாத மருத்துவமனை, பட்டியலில் இல்லாத நோய்களுக்கு சிகிச்சை பெற்று இருந்தால், தொகை மறுக்கப்படுகிறது' என அறிக்கை தாக்கல் செய்தார்.'தமிழக அரசு ஜூன், 11ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, நீதிபதி உத்தரவிட்டார்.


No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024