Tuesday, May 8, 2018

பணி புறக்கணிப்பு : டாக்டர்கள் முடிவு

Added : மே 08, 2018 00:47

சென்னை: சென்னை, தலைமை செயலகத்தில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசிய, அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறியதாவது:மத்திய அரசுக்கு இணையாக, ஊதிய உயர்வு கோரியும், ஐந்தாண்டுகளாக பதவி உயர்வு வழங்காத, 500 பேராசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்கக் கோரியும் போராடி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக, சுகாதாரத்துறை செயலர் உறுதி அளித்துள்ளார்.மருத்துவக் கல்லுாரிகளில், எம்.சி.ஐ., அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் போது, எங்கள் கோரிக்கைகளை முன் வைத்து, பணி புறக்கணிப்பு செய்வோம். இதனால், அரசு மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவக் இடங்கள் ரத்தாகும் நிலை ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024