Tuesday, May 8, 2018

இன்று தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : மே 08, 2018 02:05 | Added : மே 07, 2018 14:24 




  சென்னை : தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில், இன்று(மே 8) பரவலாகக் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பச் சலனம் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், இன்று தமிழகத்தின் உட்புற மாவட்டங்களில் பரவலாகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் அதிகஅளவாகக் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காடு, விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஆகிய இடங்களில் 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024