Tuesday, May 15, 2018

புழுதி புயல்: விமானங்கள் தாமதம்

Added : மே 14, 2018 22:16

சென்னை: டில்லியில் புழுதிப்புயல் வீசியதால், சென்னையில் இருந்து, நேற்று முன்தினம் இரவு, வட மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய, ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 10 விமானங்கள், ஐந்து மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.தலைநகர் டில்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல், கடும் புழுதிப் புயல் வீசியது. இதனால், டில்லிக்கு வந்து செல்லும் விமானங்கள் அங்கு தரையிறங்கவும், புறப்படவும் முடியாத நிலை ஏற்பட்டது.சென்னையில் இருந்து டில்லி செல்லும், ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. கோழிக்கோடு, ஐதராபாத், சிங்கப்பூர், மும்பை மற்றும் அந்தமான் செல்ல வேண்டிய, 10க்கும் மேற்பட்ட விமானங்கள் நேற்று, ஐந்து மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன.இந்த நகரங்களுக்கு இயக்கப்பட வேண்டிய விமானங்கள், டில்லியில் இருந்து வரும் விமானங்களின், இணைப்பு விமானங்களாக இயக்கப்படுவதால், தாமதம் ஏற்பட்டதாக, விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024