Tuesday, May 15, 2018

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கச் செல்லும் பக்தர்களுக்கு ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

Published on : 14th May 2018 12:09 PM  |
tirupathi

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு 25 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திருப்பதி கோயிலில் இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் அதிக நேரம் காத்திருப்பதை தவிர்க்க ஆதார் மற்றும் வாக்காளர் அடையான அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு தரிசன நேரம் குறிப்பிட்ட டிக்கெட் வழங்கப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் கோயிலுக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம். இந்த நேர ஒதுக்கீடு திட்டம் கடந்த 2-ம் தேதி முதல் முழு அளவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

பள்ளி, கல்லூரிகளுக்கு தற்போது கோடை விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் நேற்றைய நிலவரப்படி வைகுண்டத்தில் உள்ள அனைத்து அறைகளும் நிரம்பியுள்ளதால், தரிசனத்திற்கு 25 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ரூ.300 மற்றும் மலைப்பாதையில் பாத யாத்திரையாக வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். 

பக்தர்கள் வருகை அதிகளவில் உள்ளதால் நேற்றிரவு தங்கும் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் கோயில் எதிரிலும் வெட்டவெளியிலும் படுத்து உறங்கும் நிலை ஏற்பட்டது. எனவே பக்தர்கள் தரிசனத்திற்கு ஒரே இடத்தில் காத்திருக்காமல் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை மூலம் இலவச தரிசனத்திற்கான நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம். இதில் உள்ள நேரத்திற்கு தரிசனத்திற்கு வைகுண்டம் காத்திருப்பு அறைக்கு வந்தால் 2 மணி நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யலாம் எனத் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024