Tuesday, May 15, 2018

ஊரை காலியாக்கும் 'ஈ'; வெளியூர் பயணிக்கும் மக்கள்

Updated : மே 15, 2018 02:18 | Added : மே 15, 2018 02:10 | 



சிவகங்கை : சிவகங்கை அருகே 'ஈ'க்கு பயந்து ஊரை காலி செய்ய 8 கிராம மக்கள் திட்டமிட்டுள்ளனர்.

சிவகங்கை நகராட்சியில் தினமும் 21 டன் குப்பை சேகரமாகிறது. சுந்தரநடப்பு அருகே நவீன குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இக்கிடங்கை சுற்றி சுந்தரநடப்பு, துவங்கால், மணக்கரை, காட்டுநெடுங்குளம், குட்டிதின்னி, உசிலங்குளம், உடையநாதபுரம், கடுக்கா பள்ளம் ஆகிய 8 கிராமங்கள் உள்ளன.

ஐந்தாயிரம் பேர் வசிக்கின்றனர். கிடங்கில் குப்பையை தரம் பிரிக்காமல் அப்படியே எரிக்கின்றனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு சுவாச பிரச்னை, கண் எரிச்சல் ஏற்படுகிறது. மேலும் கழிவுகளால் ஈக்கள் தொல்லையும் அதிகமாக உள்ளது.

அவை கிராமங்கள் முழுவதும் பரவி, வீடுகளில் மொய்க்கின்றன. தண்ணீர் பானை, உணவுப் பொருட்களில் அமர்வதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. பலமுறை போராடியும் நடவடிக்கை இல்லாததால் ஊரைக் காலி செய்ய கிராம மக்கள் தயாராகின்றனர்.

சுந்தரநடப்பு பாண்டி கூறியதாவது: கண்மாய் வரத்துக் கால்வாயில் கிடங்கு உள்ளது. மழைக்காலங்களில் குப்பையில் உருவாகும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. ஆண்டுதோறும் மீன்பிடி திருவிழா நடத்துவோம். கழிவுநீர் கலப்பால் மீன்கள் அழிந்து விட்டன. குப்பை கிடங்கை அகற்ற மே 1ல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதிகாரிகளுக்கு அனுப்பினோம். நடவடிக்கை இல்லாவிட்டால் கிராமத்தை விட்டு அனைவரும் வெளியேற உள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

HC orders govt to appoint 292 auxiliary nurses

HC orders govt to appoint 292 auxiliary nurses  TIMES NEWS NETWORK  6.11.2024  Bhopal/Jabalpur : In a significant judgement, a division benc...