Tuesday, May 1, 2018

'மையம் விசில் மொபைல் செயலி,
ஊழல்களை ஊதி பெரிதாக்கும்' 
 
சென்னை: ''போலீசுக்கோ, அதிகாரிகளுக்கோ மாற்றானது அல்ல, 'மையம் விசில்' செயலி. அவர்களுக்கு உதவி செய்யக்கூடிய; அவர்களையே விமர்சனம் செய்யக்கூடிய கருவியாக இருக்கும்'' என, மக்கள் நீதி மைய தலைவரும், நடிகருமான கமல் தெரிவித்தார்.

மையம் விசில்,மொபைல் செயலி,ஊழல்களை ஊதி பெரிதாக்கும்,கமல்


மக்கள் நீதி மையம் கட்சியின், 'மையம் விசில்' என்ற மொபைல் செயலி, நேற்று செயல்பாட்டுக்கு வந்தது.

தூரத்து உறவு

இதை, அறிமுகம் செய்து, கமல் பேசியதாவது: பத்திரிகையாளர்கள் செய்யும் விஷயத்தை, சாமானியனும் செய்யத் துாண்டும் வகையிலானது, மையம் விசில் செயலி.

பத்திரிகையாளர்களின் பலம் வேறு. அவர்களுக்கு துணையாக, தூரத்து உறவாக இந்த செயலி வழியாக, மக்கள் நீதி மையத்தினர் பணிபுரிவர்.

ஊதி பெரிதாக்கும்

அவர்களிடமிருந்து நல்ல, கெட்ட செய்திகளை பத்திரிகையாளர்களும் அறியலாம். நம்மைச்சுற்றி நடக்கும் குற்றங்கள், ஊழல்கள், மாசு இவற்றை எல்லாம் ஊதி பெரிதாக்கும், ஒரு அபாய சங்காக, இந்த செயலி இருக்கும். இதன் வழியாக, சுட்டிக்காட்டப்படும் தவறை, கண்காணிக்கும் ஏஜென்சியாக, மக்கள் நீதி மையம் செயல்படும்.

இதன் வாயிலாக, குறைகளை எல்லாம் ஒரேயடியாக தீர்த்து விட முடியாது. செவி சாய்க்கவும், கண் பார்க்கவும் ஒரு கருவியாக, மக்கள் நீதி மையத்திற்கு இது உதவும். தற்காப்பு காரணமாக, இந்த செயலியை, மக்கள் நீதி மைய உறுப்பினர்களுக்கு மட்டுமே தருகிறோம். இது, போலீசாருக்கோ, அதிகாரிகளுக்கோமாற்று அல்ல. ஆனால், அவர்களுக்கு

உதவக்கூடிய, விமர்சனம் செய்யக்கூடிய கருவியாக இருக்கும். நம் குறைகளை நாமே தெரிந்து கொண்டால், அந்த தவறில் நம் பங்கு என்ன என்பதை புரிந்து கொள்ள, மையல் விசில் உதவும். இவ்வாறு அவர் கூறினார்.

'மையம் விசில்' செயலியை, உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்; பிரச்னைகளை சுட்டிக் காட்ட முடியும். புகார்களை, கட்சி உறுப்பினர்கள் மூன்று பேர் தனித்தனியாக ஆய்வு செய்வர். புகார் உண்மை என தெரிந்தால், கட்சியின் உயர்மட்டக்குழு கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 2.5.2024