Friday, July 27, 2018

காளை வயிற்றில் 15 கிலோ பாலிதீன் அகற்றம்

Added : ஜூலை 26, 2018 22:57




மதுரை, மதுரையில் ஜல்லிக்கட்டு காளை வயிற்றில் இருந்த 15 கிலோ பாலிதீன் பைகளை, திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை பேராசிரியர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர்.ஊமச்சிகுளம் அருகே மாரணி அருண்குமார். இவர் 2 வயதுடைய, ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார். கடந்த 6 மாதமாக காளை சோர்வாகவும், வயிறு ஊதிய நிலையிலும் இருந்தது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தும் பலன் இல்லை. திடீரென மூச்சுத்திணறி அவதிப்பட்டது.இது குறித்து திருப்பரங்குன்றம் கால்நடை மருத்துவ பல்கலை ஆய்வு மையத்திற்கு அருண்குமார் தகவல் தெரிவித்தார். மைய தலைவர் டாக்டர் உமாராணி தலைமையில் பேராசிரியர்கள் ஊமச்சிகுளத்தில் அக்காளைக்கு அறுவை சிகிச்சை செய்து, அதன் வயிற்றில் இருந்த 15 கிலோ பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பைகளை அகற்றினர்.டாக்டர் உமாராணி கூறியதாவது:காளை வயிற்றில் எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, பாலிதீன் பைகள் இருந்தது தெரிந்தது. மூன்று மணிநேர அறுவை சிகிச்சை மூலம் அகற்றினோம். தற்போது அந்த காளை நல்ல உணவு எடுக்கிறது. மேய்ச்சலுக்கு செல்லும் போது பாலிதீன் சாப்பிடுவதை தவிர்க்க செய்ய வேண்டும், என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024