Wednesday, July 25, 2018


  ராஜஸ்தானில் படு கிராக்கிகோமியம் லிட்டர் ரூ30; பால் ரூ25 : வேளாண் பல்கலைக்கு 500 லிட்டர் சப்ளை
 
தினகரன் 5 hrs ago

 


புதுடெல்லி : ராஜஸ்தானில் கோமியம் ஒரு லிட்டர் ரூ30 வரை விற்கப்படுகிறது. ஆனால், பால் ஒரு லிட்டர் ரூ22 முதல் ரூ25 வரைதான் விலை போகிறது. ராஜஸ்தானில் பசு மாடு வைத்து பால் வியாபாரம் செய்பவர்களுக்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. பால் வியாபாரத்தை விட கோமியத்தின் மூலம் இவர்கள் பணம் அள்ளுகிறார்கள். பசுவின் பால் மட்டுமின்றி, ேகாமியம் வழிபாடுகள், பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. தற்போது, விவசாய நிலங்களில் இயற்கை பூச்சிக்கொல்லி மருந்தாகவும், மருத்துவ தேவைகளுக்கும் பயன்படுகிறது. எனவே, கோமியத்துக்கு படு கிராக்கி ஏற்பட்டுள்ளது. அதிலும், உயர் ரக பசுக்களின் கோமியத்துக்கு டிமாண்ட் மிக அதிகம். ராஜஸ்தானில், சாதாரண பசுமாடுகள் மட்டுமின்றி, கிர், தர்பார்க்கர் போன்ற உயர்ரக பசுக்களும் வளர்த்து வருகின்றனர். ஜெய்ப்பூரில் கிர் பசு வைத்து பால் வியாபாரம் செய்யும் ஒருவர் கூறியதாவது: பல ஆண்டுகளாக பால் விற்பனையில் ஈடுபட்டு வருகிறேன். கிர் பசுவில் இருந்து கிடைக்கும் கோமியத்தை லிட்டர் ரூ30 முதல் ரூ50 வரை விற்பனை செய்கிறேன். இயற்கை பூச்சிக்கொல்லியாக பயன்படுத்துவதால், இயற்கை முறையில் விவசாயம் செய்பவர்களிடையே இதற்கு மவுசு அதிகம் உள்ளது. அவர்கள், பூச்சி தாக்குதலை தடுக்க பயிர்களின் மீது கோமியத்தை தெளிக்கின்றனர். சிலர் மத சடங்குகளுக்கு வாங்கிச் செல்கின்றனர். பசுவிடம் காலை, மாலை இரு வேளையும் பால் கறக்கப்படுகிறது. ஆனால் கோமியம் பிடிப்பதற்கு எந்த நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியுள்ளது. விலை அதிகம் என்பதால், இரவில் கூட தூங்காமல் கோமியம் பிடிக்க காத்திருக்கிறோம். ஒரு சொட்டு கூட கீழே விழவிடாமல் பிடித்து விடுகிறோம். இதனால் எங்கள் வருவாய் இரட்டிப்பு மடங்கு அதிகரித்துள்ளது என்றார். மற்றொரு வியாபாரி கூறுகையில், ‘கோமியத்துக்கு விலை அதிகம். இதனால் நான் பால் வியாபாரத்தை விட்டுவிட்டு கோமியம் விற்பனையில் இறங்கி விட்டேன். உயர் ரக பசுக்களின் கோமியத்தை பண்ணைகள் போன்றவற்றுக்கு ஒரு லிட்டர் ரூ50 வரை விற்பனை செய்கிறேன். யாகசாலை பூஜைகள் மற்றும் வழிபாடுகளுக்கும் வாங்கிச்செல்கின்றனர்’’ என்றார். உதய்பூரில் உள்ள மகாராணா பிரதாப் வேளாண் பல்கலைக்கழகம் மாதத்துக்கு 300 முதல் 500 லிட்டர் கோமியம் வாங்குகிறது. இதற்காக மாதம் ரூ15,000 முதல் ரூ20,000 செலவிடுகிறது. இயற்கை உரம் உட்பட பல்வேறு தயாரிப்புகள் மற்றும் ஆராய்ச்சிக்கு இந்த பல்கலைக்கழகம் இதனை பயன்படுத்துகிறது. பாலை விட கோமியம் விலை அதிகமாக உள்ளதால், பசு மாடு வைத்து பராமரிப்பவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024