Friday, July 13, 2018

பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார் உடல்நிலை கவலைக்கிடம்

Added : ஜூலை 13, 2018 07:20




மும்பை: உடல்நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பழம் பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார்,95, உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1944-களில் இந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்தவர் பாலிவுட் நடிகர் திலீப் குமார், 95, வயது முதுமை காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக நோய்வாய்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவால் கடந்த ஆண்டு ஆகஸ்டில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுநீரக கோளாறு காரணமாக ஐ.சி.யூ.,விற்கு மாற்றப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இது குறித்து திலீப்குமாரின் மனைவி சயிராபானு டுவிட்டரில் கூறுகையில், திலிப் குமாருக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என ரசிகர்களுக்கு கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’

Jan 5 not my real birthday, says Didi ‘OFFICIAL AGE WRONG’ Tamaghna.Banerjee@timesofindia.com  09.01.2025 Kolkata : Three days after she was...