Tuesday, July 17, 2018

வீடு தேடி வரும் சான்றிதழ்

Added : ஜூலை 17, 2018 01:01




புதுடில்லி : வீட்டில் இருந்தபடியே, 50 ரூபாய் கட்டணத்தில் அரசு சேவைகளை பெறும் வசதிக்கு, டில்லி அரசு அனுமதி அளித்துள்ளது.

டில்லியில், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, டிரைவிங் லைசென்ஸ், ரேஷன் கார்டு, குடியிருப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட, 100 சேவைகளை, அலுவலகம் அல்லது வீட்டில் இருந்தபடியே பெறுவதற்கு, சேவை கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், முதல்வர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த பரிந்துரைக்கு, அனுமதி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check

Is someone using your Aadhaar without your knowledge? Here is how to check The Aadhaar card is a vital identification document for Indians. ...