சபரிமலை நடை திறந்தது; பம்பையில் வெள்ளப்பெருக்கு
Added : ஜூலை 17, 2018 04:31
சபரிமலை : ஆடி மாத பூஜை களுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறந்தது. பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். தொடர்ந்து ஆழியில் தீ வளர்க்கப்பட்டது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும், தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். பின்னர் வழக்கமான பூஜைகள் நடைபெறும். ஜூலை 21-ம் தேதி வரை எல்லா நாட்களிலும் இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடை பெறும். 21 இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
கேரளாவில் பெய்து வரும் மழை காரணமாக பம்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நடந்து செல்லும் மணல் பரப்பிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
No comments:
Post a Comment