Thursday, July 19, 2018

'ஐ போன்' தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் உஷாராக இருக்க 'சைபர் கிரைம்' போலீஸ் அறிவுரை

Added : ஜூலை 18, 2018 22:57

தேனி, ' ஐ போன்' பயன்படுத்துவோரின் தகவல்களை திருடும் வெளிநாட்டு கும்பல் குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும்,' என, சைபர் கிரைம் போலீசார், மாவட்ட இணைய வழி குற்றங்களை கண்காணிக்கும் பிரிவு போலீசாரை உஷார் படுத்தி உள்ளனர்.இந்திய உளவுத் துறைக்கு கனடா, ஆஸ்திரேலியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த (டேட்டா கேட்சர்) தகவல்களை திருடும் நிபுணர்கள், இந்தியாவில் ' ஐ- போன் ' பயன்பாட்டாளர்களான தொழிலதிபர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள் என முக்கிய நபர்களின் தகவல்களை விசேஷ மென்பொருள் மூலம் திருடும் கும்பல் குறித்து தகவல் கிடைத்து உள்ளது. இதனால் மாநில சைபர் கிரைம் போலீசார், மாவட்ட சைபர் கிரைம் குற்றங்களை கண்காணிக்கும் அதிகாரிகளை உஷார் படுத்தி உள்ளனர்.இந்த ஐ-போன் 'ஹை ஜாக் கேக்கர்ஸ்' தொழில்நுட்பம் குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'முதற்கட்டமாக முக்கிய நபர்கள் பயன்படுத்தும் 13 ஐ-போன்களின் தகவல்கள் வெளிநாடுகளில் இருந்து திருடப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஐ-போன் பாதுகாப்பாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தவறான, தேவையற்ற எஸ்.எம்.எஸ்., இணைப்புக்கள், தேடுதல் குறித்த இணைய வழி குறிப்புக்களை பதிவிறக்கம் செய்வதையோ, தெரியாத நபர்களிடம் இருந்து வரும் இணைப்புகளையோ பயன்படுத்த வேண்டாம்.மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் இதுகுறித்து முன் எச்சரிக்கையாக புகார் அளிக்கலாம்,' என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024