Thursday, July 19, 2018

பல்கலை மானியக்குழு விதிகளில் திருத்தம் உயர்நீதிமன்றம் தடை

Added : ஜூலை 18, 2018 23:38

மதுரை, தொலைநிலைக் கல்வி தொடர்பான பல்கலை மானியக்குழு விதிகளில் திருத்தம் செய்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது.திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பதிவாளர் தாக்கல் செய்த மனு: திறந்தவெளி பல்கலை மற்றும் தொலைநிலைக் கல்வி படிப்புகள் தொடர்பாக பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) விதிகளில் 2018ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதன்படி 'நாக்' கவுன்சில் அங்கீகாரத்திற்கு 4 புள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக 3.26 கிரேடுபுள்ளிகள் (பாயின்ட்) பெற்றிருக்கும் பட்சத்தில், புதிய பாடப் பிரிவுகளை துவங்க முடியும். இந்த நடைமுறை சாத்தியமற்றது.இந்தியாவில் பெரும்பான்மையான பல்கலைகளால் பின்பற்ற இயலாது. கல்லுாரிகளில் போதிய ஆசிரியர்கள் உள்ளனரா? உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளனவா? என ஆய்வு செய்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது. ஆனால்,அதுபோன்ற நடைமுறையை பின்பற்றதொலைநிலைக் கல்விக்கு விதிகளில் திருத்தம் செய்தது ஏற்புடையதல்ல. யு.ஜி.சி.,விதி திருத்தத்தில் சில பல்கலைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இது பல்கலைகளை பாகுபடுத்துவதாகஉள்ளது. யு.ஜி.சி., விதிகளில் திருத்தம்செய்ததற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு பதிவாளர் மனு செய்தார்.நீதிபதிகள் எம்.துரைசாமி, அனிதா சுமந்த் அமர்வு இடைக்கால தடை விதித்து, யு.ஜி.சி, செயலருக்குநோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024