Friday, July 20, 2018

பல்கலைக்கு மத்திய அரசு உத்தரவு

Added : ஜூலை 19, 2018 21:58

புதுடில்லி, : 'பிஎச்.டி., மாணவர்கள் சமர்ப்பிக்கும், ஆராய்ச்சி கட்டுரைகளில் இடம் பெற்றுள்ள தகவல்கள், திருடப்பட்டவையா என்பதை கட்டாயம் கண்டறிய வேண்டும்' என, பல்கலைகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.ராஜ்யசபாவில் நேற்று, இது பற்றி, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர், பிரகாஷ்ஜாவடேகர் கூறியதாவது:பல்கலைகளில், பிஎச்.டி., படிக்கும் மாணவர்கள் சமர்ப்பிக்கும் ஆராய்ச்சி கட்டுரைகள் அனைத்தும் போலி என, கூற முடியாது. ஆனால், கருத்துகள் திருடப்பட்டு, சில கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. இதனால், பல்கலைக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.அதனால், ஆராய்ச்சி கட்டுரைகளின் உண்மை தன்மை, கட்டாயம் கண்டறியப்பட வேண்டும் என, பல்கலைகளுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024