Friday, July 20, 2018

'ஆதார்' கார்டு தொலைந்ததா மறுபடியும் பெறுவது எளிது

Added : ஜூலை 19, 2018 22:44 |

  சென்னை, காணாமல் போன, 'ஆதார்' கார்டை, '1947' என்ற தொலைபேசி எண் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ள முடியும்.மத்திய அரசு, நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், புகைப்படம், விழி, விரல் ரேகை உள்ளிட்ட விபரங்களுடன் கூடிய, 'ஆதார்' அட்டையை வழங்கி வருகிறது. புதிதாக வங்கி கணக்கு துவக்குவது, ரேஷன் கார்டு பெறுவது என, அரசின் அனை த்து சேவைகளையும் பெறுவதற்கு, ஆதார் கார்டு அவசியம்.சிலர், அந்த கார்டை தொலைத்து விடுவதுடன், ஆதார் எண்ணும் தெரியாததால், மாற்று கார்டு வாங்க சிரமப்படுகின்றனர். இதற்காக, இடைத்தரகர்களை நாடி, பணமும் செலவு செய்கின்றனர். காணாமல் போன, ஆதார் கார்டை, '1947' என்ற, நுகர்வோர் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைப்பதன் வாயிலாக, மறுபடியும் பெற்று கொள்ளலாம்.ஆதார் எண் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அதன்படி, 1947 என்ற தொலைபேசி எண்ணுக்கு போன் செய்து, தமிழில் பேசுவதற்கு, அவர்கள் சொல்லும் எண்ணை, போனில் அழுத்த வேண்டும். பின், உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி சொன்னால், ஆதார் எண்ணை கண்டுபிடித்து, உங்களுக்கு அனுப்புவர்.

No comments:

Post a Comment

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock

Daylight assault on doctor at government hospital leaves medical fraternity in shock Deputy Chief Minister Udhayanidhi Stalin and Health Min...