Wednesday, July 25, 2018

அதிக வருமான வரி செலுத்திய 'தல' தோனி

Added : ஜூலை 24, 2018 18:47





ராஞ்சி: கடந்த நிதியாண்டில் அதிகளவு வருமான வரி செலுத்தியவர் என்ற பெருமையை இந்திய அணி மாஜி கேப்டன் தோனி பெற்றுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக இருந்த தோனி, கடந்த 2016-ம் ஆண்டு டி20 மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இருந்தபோதிலும், அதிகமான விளம்பரங்கள், நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போன்றவற்றின் மூலம் தோனிக்கு ஆண்டுக்குக் கோடிக்கணக்கில் வருமானம் வந்தது. அந்த வகையில் கடந்த 2016-17-ம் ஆண்டு எம்.எஸ். தோனி முன்தேதியிட்ட வருமான வரியாக ரூ.10.50 கோடி செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், பிஹார் மற்றும் ராஞ்சி மண்டல வருமானவரித்துறை இயக்குநர் ஒருவர் கூறுகையில், தோனி ''கடந்த 2017-18-ம் ஆண்டுக்கான பிஹார் மற்றும் ஜார்கண்ட் மண்டலத்தில் தனிநபர்களில் அதிகமான வருமான வரி செலுத்தியதில் தோனி முதலிடத்தில் உள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.12.17 கோடி வருமானவரி செலுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நடப்பு நிதியாண்டுக்கும் முன் தேதியிட்டு ரூ.3 கோடி வருமான வரி செலுத்தியுள்ளார்' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024