Wednesday, July 25, 2018

லஞ்சம் கொடுத்தாலும் தண்டனை: மசோதா நிறைவேற்றம்

Added : ஜூலை 25, 2018 02:57




புதுடில்லி: லஞ்சம் வாங்குபவர் மட்டுமின்றி, கொடுப்பவருக்கும் தண்டனை வழங்கும் புதிய மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.

லஞ்ச தடுப்புச் சட்ட திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று விவாதிக்கப்பட்டது. லஞ்சம் வாங்குபவர் மட்டுமின்றி, கொடுப்பவருக்கும், தண்டனை வழங்கும் வகையில், இந்த மசோதவில் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது. உறுப்பினர்களின் விவாதம் முடிந்ததும், மத்திய பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பதில் அளித்தார்; பின், இந்தப் புதிய மசோதா நிறைவேறியது.

ராஜ்யசபாவில் கடந்த வாரம் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. லஞ்ச வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கவும் இந்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

லோக்பால் குறித்து உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் சிங், ''லோக்பால் அமைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினராக இருக்க வேண்டும். ''ஆனால், லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்துக்கு தேவையான இடங்கள் எந்தக் கட்சிக்குமே இல்லை,'' என்றார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024