Thursday, July 26, 2018

மருத்துவ படிப்பு: தரகர்களிடம் ஏமாறாதீர்'

Added : ஜூலை 25, 2018 23:22

சென்னை, மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:அரசு மருத்துவ கல்லுாரிகளில் உள்ள, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், நிகர்நிலை பல்கலையில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களை பெற்று தருவதாக, மாணவர்களை அணுகும் இடைத்தரகர்கள், இதற்காக, பெருமளவு கட்டணம் செலுத்த வேண்டும் என, பணம் பறிக்க முயல்வதாக தகவல்கள் வந்துள்ளன.மத்திய சுகாதார சேவைகள் இயக்ககத்தின் கீழ் செயல்படும், மருத்துவ கவுன்சில் குழுவானது, இத்தகைய நடைமுறைகளை ஊக்குவிப்பதில்லை. எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இட ஒதுக்கீடுகள், நீட் தேர்வில் பெற்ற தரவரிசையின் அடிப்படையில், இணையதள கவுன்சிலிங் வாயிலாக நடைபெறுகின்றன. இணையதளம் வாயிலாகவே, அந்தந்த கல்லுாரிகளில் நிரப்பப்படும் இடங்களின் விவரமும் வெளியிடப்படுகிறது.எனவே, மாணவர்கள் மற்றும் பெற்றோர், இது போன்ற இடைத்தரகர்கள் மற்றும் ஏமாற்று பேர்வழிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். இடைத்தரகர்களின் வலையில் வீழ்ந்து பணத்தை இழந்தால், மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சுகாதார சேவைகள் இயக்ககம் மற்றும் மருத்துவ கவுன்சிலிங் குழுவோ பொறுப்பாகாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024