Friday, July 27, 2018

கிரகணத்தை கொண்டாடுவோம்': வானியல் ஆய்வாளர்

Added : ஜூலை 27, 2018 05:16



  புதுடில்லி : இந்த நுாற்றாண்டின் மிகப் பெரிய சந்திர கிரகணம், இன்று இரவு நடக்கிறது. இந்நிலையில், 'இந்திய ரேடியோ அஸ்ட்ரோ பிசிக்ஸ்' மையத்தை சேர்ந்த, வானியல் ஆய்வாளர், நிருஜ் மோகன் ராமானுஜம் கூறியதாவது:

இந்த நுாற்றாண்டில் நிகழும், மிகப் பெரிய சந்திர கிரகணம் இன்று நடக்கவுள்ளது. அப்போது, நிலவு சிவப்பு நிறத்தில் காணப்படும். மிக அரிய இயற்கை நிகழ்வுகளை ரசிக்காமல், மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி தவிர்ப்பது வேடிக்கையானது. எனவே, இந்த சந்திர கிரகணத்தை, செல்பி எடுத்தும், கிரகண காலங்களில் உணவு சாப்பிட்டும், மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024