Monday, July 16, 2018


கட்சி குறித்து காலம் பதில் சொல்லும்: ரஜினி; மறுபடியும் மொதல்ல இருந்தா...!   dinamalar 16.07.2018

சென்னை : ''கட்சி துவங்குவது குறித்து, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,'' என, நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.




ஈரோடு மாவட்டம், கனிராவுத்தர்குளத்தைச் சேர்ந்த, இரண்டாம் வகுப்பு மாணவன் யாசின். இவன், பள்ளி செல்லும் போது, கீழே கிடந்த பையில், 50 ஆயிரம் ரூபாய் இருப்பதை கண்டான். அதை, தன் ஆசிரியர் உதவியுடன், போலீசில் ஒப்படைத்தான். சிறுவனை அழைத்து, போலீசார் பாராட்டினர்.

வறுமையில் வாடும் சிறுவனின் குடும்பத்தாருக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர்

உதவி செய்ய முன் வந்தனர். அதை ஏற்க மறுத்த யாசின், 'ரஜினியை சந்திக்க வேண்டும்' என்ற, தன் ஆசையை வெளிப்படுத்தினான். இதையடுத்து, சிறுவனையும், அவனது குடும்பத்தினரையும் ரஜினி, நேற்று தன் வீட்டிற்கு அழைத்து பாராட்டினார். சிறுவன் யாசினுக்கு, தங்கச்செயினை பரிசாக அளித்தார்.

பின், ரஜினி கூறியதாவது: சிறுவன் யாசினை, என் பிள்ளையாக நினைத்து, படிக்க வைப்பேன். அவன், என்ன படிக்க நினைத்தாலும் படிக்கலாம்; நான் இருக்கிறேன். மற்ற மாநிலங்களை விட, தமிழகத்தில் கல்வித் துறை சிறந்து விளங்குகிறது.

அமைச்சர் செங்கோட்டையன் சிறப்பாக செயல்படுகிறார். அதுபோல, பிற துறைகளும் செயல்பட வேண்டும். தமிழகத்திற்கு, காமராஜர் போன்ற தலைவர்கள் வேண்டும். தமிழகத்தில், லோக் ஆயுக்தா கொண்டு வந்தது வரவேற்கத்தக்கது. அது, அதிகாரம் உள்ள அமைப்பாக செயல்பட வேண்டும்.

லோக்சபா, சட்டசபை என, இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது நல்ல விஷயம்; நேரமும், செலவும் மிச்சமாகும். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து, இன்னும் முடிவு செய்யவில்லை; உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும். லோக்சபா தேர்தலுக்கு முன், கட்சி துவங்குவது குறித்து, காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

தமிழருவி மணியன், என்னுடன் இணைந்து செயல்பட்டால், வரவேற்பேன். சென்னை - சேலம் எட்டு வழி பசுமைச் சாலை திட்டம் அவசியம். இதுபோன்ற திட்டங்களால் தான், நாடு வளம் பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024