Monday, July 16, 2018

தமிழகத்தில், 6 லட்சம் பேர் வருமான வரி தாக்கல்

Added : ஜூலை 16, 2018 03:51




தமிழகத்தில், ஜூன், 30 வரை, 6.3 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்ரலில் துவங்கி நடந்து வருகிறது. 


நடப்பு நிதியாண்டு முதல், மாத ஊதியம், மாத ஓய்வூதியம் என, வருமான வரி உச்சவரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயமாகும்.வருமான வரியை தளர்த்துவதற்காக, காப்பீடு போன்றவற்றில் பணம் செலுத்தி, வருமானம் உச்ச வரம்புக்கு கீழ் இருந்தாலும், இந்த ஆண்டு, வருமான வரி கணக்கை கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வரும், 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யத் தவறினால், வருமானத்துக்கேற்ப அபராதம் செலுத்தும் நடைமுறையும் கொண்டு வரப்பட்டுள்ளது.


இந்நிலையில், ஜூன் வரை, நாடு முழுவதும், 77.25 லட்சம் பேர், வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில், 6.3 லட்சம் பேர், மின்னணு முறையில் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தை அடுத்து, மேற்கு வங்கத்தில், 5.6 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
அபராதம் இன்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, வரும், 31ம் தேதி கடைசி நாள். இதனால், அதற்குள் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2019 மார்ச், 31க்குப் பின், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய முடியாது.
- நமது நிருபர் -

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024