Friday, July 27, 2018


'சிம் கார்டு' இல்லாமல் போன் பேசலாம்! பி.எஸ்.என்.எஸ்., புதிய திட்டம்


Updated : ஜூலை 27, 2018 01:32 | Added : ஜூலை 27, 2018 01:31 |


  கோ:சிம் கார்டு இல்லாமல், மொபைல் செயலி மூலமே அனைத்து நெட்வொர்க் எண்ணுக்கும் பேசி மகிழும், புதிய திட்டத்தை பி.எஸ்.என்.எல்.,அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், மொபைல் போனில், 'விங்ஸ்' எனும் மொபைல் செயலியை பதிவிறக்கி நாட்டில் உள்ள எந்த நிறுவனத்தின் மொபைல் எண்ணுக்கும் பேசி மகிழலாம். நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம் ஆக., மாதம் முதல் செயல்படுத்தப்படவுள்ளது.

கோவை பி.எஸ்.என்.எல்., முதன்மை பொது மேலாளர் முரளிதரன் கூறியதாவது:தொலைத்தொடர்பு சேவைதுறையில் நிலவும், கடுமையான போட்டியை சமாளிக்கவே பி.எஸ்.என்.எல்., இத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இச்செயலியை மொபைல் போன் அல்லது கம்ப்யூட்டரில் பதிவிறக்கம் செய்து, ஆண்டு முழுவதும் வரைமுறையில்லாமல் இலவசமாக பேசிக்கொள்ளலாம்.
இதற்கான கட்டணம், 1,099 ரூபாய் மட்டுமே. எஸ்.எம்.எஸ்., அனுப்ப முடியாது. இணைய வசதி அல்லது'வைபை' இணைப்பில் மட்டுமே பேச முடியும்; ரோமிங் வசதி உண்டு.இந்த செயலியை பதிவிறக்கி வைத்திருப்போர் இடையே தான் பேச முடியும். இந்த சேவையை பெற வாடிக்கையாளர்கள், bsnl.co.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, ஆதார் கார்டு எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான முன்பதிவு தமிழகம் முழுவதும் துவங்கியுள்ளது.

இதுவரை, 1,100 பேர் பதிவு செய்துள்ளனர். விரும்புவோர் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல்., தொலைத்தொடர்பு சேவை மையத்தை அணுகலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024