Friday, July 27, 2018

ரூ.8,000 லஞ்சம் கருவூல அதிகாரி கைது

Added : ஜூலை 26, 2018 23:38

திண்டுக்கல், ஓய்வு பெற்ற ஆசிரியரிடம், பணிக்கொடை வழங்க, 8,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய, கருவூலத் துறை கண்காணிப்பாளரை, திண்டுக்கல், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திண்டுக்கல்லைச் சேர்ந்தவர் செல்வராஜ், 58; மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக இருந்து, ஜனவரியில் ஓய்வு பெற்றார். இவரது, நான்கு மாத சம்பளம் மற்றும் பணிக்கொடை தொகை, 10 லட்சம் ரூபாயை பெறுவதற்கு, கருவூலத்தில் விண்ணப்பித்தார்.கண்காணிப்பாளர் சந்திரன், 40, என்பவர், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தர மறுத்ததால், ஆறு மாதங்களாக அலைய வைத்துள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறையில், செல்வராஜ் புகார் செய்தார்.ரசாயனம் தடவிய, 8,000 ரூபாயை, நேற்று மதியம், 3:00 மணிக்கு செல்வராஜ், கண்காணிப்பாளரிடம் வழங்கினார். மறைந்திருந்த, டி.எஸ்.பி., சத்தியசீலன் தலைமையிலான போலீசார், சந்திரனை கைது செய்தனர்.டி.எஸ்.பி., கூறியதாவது:லஞ்சத்திற்கு எதிரான கருத்துகளை, செல்வராஜ் பாடமாக நடத்தி வந்துள்ளார். அவரிடமே லஞ்சம் கேட்டு, பல நாட்கள் அலைய வைத்து உள்ளனர். மருத்துவ செலவிற்கு கூட பணமின்றி திண்டாடியதால், மனம் நொந்த ஆசிரியர், எங்களிடம் புகார் அளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.ராமநாதபுரம் நகராட்சியில், வருவாய் பிரிவில் பணிபுரிபவர், கணேசன், 47. நகராட்சியில் உள்ள, ஏழு வார்டுகளில் வரி விதிப்பதற்கும், வசூலிப்பதற்கும் பொறுப்பாளராக இருந்தார்.சுகந்தகுமார் என்பவரின், 3 சென்ட் நிலத்திற்கு, 8,000 ரூபாய் வரி விதிக்க, 4,000 ரூபாய் லஞ்சமாக, கணேசன் கேட்டுள்ளார்.சுகந்தகுமார், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். நேற்று பிற்பகல், 3:00 மணிக்கு நகராட்சி அலுவலகத்தில், சுகந்தகுமார், ரூபாய் நோட்டுகளை, கணேசனிடம் வழங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024