Thursday, July 26, 2018

குற்றத்தின் நிழலில் குழந்தைகள்!


ஜி.லட்சுமணன்


HASSIFKHAN K P M


இரா.செந்தில் குமார் ஜி.லட்சுமணன், இரா.செந்தில்குமார் - ஓவியம்: ஹாசிப்கான்

மொத்தத் தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது அந்தச் சம்பவம். சென்னையின் அடுக்குமாடிக் குடியிருப்பில் 12 வயதுக் குழந்தையை செக்யூரிட்டி முதல் பிளம்பர் வரை பலரும் மாதக்கணக்கில் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய கொடூரம்... இதயம் நடுங்கச்செய்கிறது. 300-க்கும் மேற்பட்ட வீடுகளிருந்தும், ஒரு குழந்தைக்கு நிகழ்ந்த தொடர் கொடூரத்தைக் கவனிக்க யாருக்கும் நேரமிருக்கவில்லை. நகர்ப்புற வாழ்க்கையில் மனிதர்களிடையே ஒட்டுறவின்மையும், பாதுகாப்பின்மையும் அதிகரித்துக்கொண்டே போகிறது. வாழ்வாதாரம் தேடி இடைவிடாது ஓடிக்கொண்டே யிருப்பதுதான் வாழ்க்கையென்றாகிவிட்டது. குழந்தைகள் அநியாயமாகக் கைவிடப்படுகிறார்கள்.

எவரும் துன்புறுத்தலாம் என்கிற நிலையில் வாழும் உயிரினங்களில் ஒன்றாக மாறியிருக்கின்றன குழந்தைகள். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் இந்தியா வெகுவேகமாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. 2014-க்கும் 2016-க்கும் இடைப்பட்ட காலங்களில் நிகழ்ந்துள்ள குற்றப்பதிவுகளே அதற்கு ஆதாரம். குற்ற ஆவணக்காப்பக அறிக்கையின்படி 2014-ல் பதிவுசெய்யப்பட்ட மொத்த வழக்குகள் 89,423. 2016-ல், ஒரு லட்சத்தைத் தாண்டுகின்றன. தமிழகத்திலோ 2016-ல் 363 குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு இரையாகியிருக்கிறார்கள். 1,043 குழந்தைகள் கடத்தப்பட்டிருக்கிறார்கள்.

குழந்தைகள் தனிச்சொத்தல்ல; சமூகத்தின் சொத்து என்கிறது யுனிசெஃப் அமைப்பு. குழந்தைகளுக்குப் பாதுகாப்பளித்து, சத்துணவளித்து, கல்வியளித்து, சிறந்த குடிமக்களாக அவர்களை உருவாக்க வேண்டியது சமூகத்தின் பொறுப்பு. ஆனால், சமூகவெளி குழந்தைகளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை. ஆண் பெண் வேறுபாடின்றி, பத்தில் ஆறு குழந்தைகள் ஏதோவொரு விதத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக யுனிசெஃப் அறிக்கைகள் சொல்கின்றன. பெரும்பாலும் குடும்ப உறவுகளிலிருந்தே இது தொடங்கிவிடுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024