Added : ஜூலை 21, 2018 23:30
சென்னை: நாற்காலி உடைந்த பிரச்னையில், விற்பனை நிறுவனம், வாடிக்கையாளருக்கு, 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை மாவட்ட, தெற்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த, அன்னாமாத்யூ தாக்கல் செய்தமனு:ஆழ்வார்பேட்டை, டி.டி.கே., சாலையில் உள்ள, வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிறுவனத்தில், 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து, சுழலும் நாற்காலி வாங்கினேன். இரண்டு மாதத்தில், நாற்காலி கால் உடைந்ததால், பயன்படுத்த முடியவில்லை விற்பனை நிறுவனத்திற்கு தெரிவித்தேன். அந்நிறுவன ஊழியர்கள், 'இதை சரிசெய்ய முடியாது; புதிய நாற்காலி மாற்றி தருகிறோம்' என்றனர்.ஆனால், தரவில்லை மன உளைச்சலுக்கு ஆளானேன். நாற்காலி தொகையுடன், 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.வழக்கு விசாரணையில், 'நாற்காலி பழுது நீக்க ஊழியர்கள் சென்றும், மனுதாரர் அனுமதிக்கவில்லை. சேவை யில் குறைபாடில்லை. வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, விற்பனை நிறுவனம் தெரிவித்தது.இந்த வழக்கில், நீதிபதி மோனி, நீதித்துறை உறுப்பினர் அமலா பிறப்பித்த உத்தரவில், 'விற்பனை நிறுவனம் நியாயமற்ற வர்த்தகம் செய்துள்ளது. 'மனுதாரருக்கு, நாற்காலி தொகையை, திரும்ப வழங்குவதுடன், 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், 5,000 ரூபாய் வழக்கு செலவும் வழங்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment