Sunday, July 22, 2018

அரசு டாக்டர்கள் செப்., 21ல் ஒருநாள் வேலை நிறுத்தம்

Added : ஜூலை 22, 2018 01:51

திண்டுக்கல்: மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம் வழங்க கோரி, அரசு டாக்டர்கள், செப்., 21ல், ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக, அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு தலைவர், செந்தில் தெரிவித்தார்.திண்டுக்கல்லில், அனைத்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடந்தது. புறக்கணிப்புமாநில தலைவர், செந்தில் கூறியதாவது:மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான சம்பளம், பதவி உயர்வு, படி வழங்க வலியுறுத்தி, ஆக., 1 முதல், அனைத்து மாவட்டங்களிலும், கறுப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கையை வலியுறுத்துவோம். ஆகஸ்ட் மூன்றாவது வாரம், பணி புறக்கணிப்பு போராட்டங்களில் ஈடுபடுவோம்.இதை, செப்., 1ல் தீவிரப்படுத்தி, நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில், புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை புறக்கணிப்பு, ஆப்பரேஷன் நிறுத்தம் என, படிப்படியாக ஈடுபடுவோம்.இதற்குள் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், செப்., 21ம் தேதி, ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வோம். அரசு, மாவட்ட, ஆரம்ப சுகாதார நிலையங்கள் என, 20 ஆயிரம் பேர் இதில் ஈடுபடுவர்.ஓய்வு பெறுகிறோம்எம்.பி.பி.எஸ்., முடித்து பணியில் சேரும் போது, ஒரே மாதிரியான ஊதியம்தான் வழங்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசில், ஸ்பெஷாலிட்டி முடித்தவர்களுக்கு, 5,௦௦௦ முதல், 20 ஆயிரம் ரூபாய் வரை அதிகம் கிடைக்கிறது. 60 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை சம்பள வித்தியாசத்தில் ஓய்வு பெறுகிறோம். எனவே, உரிமைக்காக போராடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 20.09.2024