சிவகங்கை அருகே பஞ்சம் : கிழங்கு சாப்பிடும் மக்கள்
Added : ஜூலை 21, 2018 23:47
சிவகங்கை: சிவகங்கை அருகே, மூன்றாண்டாக பஞ்சம் நிலவுவதால், ஒரு வேளை உணவாக கிராம மக்கள் கொட்டிக்கிழங்கை சாப்பிடுகின்றனர்.இடையமேலுார் ஊராட்சி வேலாங்கப்பட்டியில், 500 பேர் வசிக்கின்றனர். விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ளனர். மூன்று ஆண்டுகளாக மழை இல்லாததால் வறட்சி நிலவுகிறது. இதனால் ஒரு தரப்பினர், 100 நாள் வேலைத் திட்டத்தை நம்பியே உள்ளனர்.வேலை, ஊதியம் முறையாக கிடைக்காததால் சிரமப்படுகின்றனர். குடும்பத்திற்கு, 20 கிலோ மட்டுமே ரேஷன் அரிசி கொடுப்பதால், போதவில்லை. இதனால் ஒருவேளை உணவுக்காக கொட்டிக் கிழங்கை சமைத்து சாப்பிடுகின்றனர். இதற்காக அவர்கள் கண்மாய், வயல்களை தேடிச் சென்று, கிழங்கை தோண்டி எடுக்கின்றனர்.கிராம பெண்கள் கூறியதாவது:தொடர் வறட்சியால், விவசாய பணிகளே இல்லாமல் போனது. இதனால், கூலி வேலைக்கு செல்ல முடியவில்லை. 100 நாள் வேலையும் சரியாக கிடைப்பதில்லை. முப்பது ஆண்டுகளுக்கு முன், பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், கொட்டிக் கிழங்கை தான் உணவாக சாப்பிட்டனர். தற்போது அதேநிலை திரும்பியுள்ளது. இக்கிழங்கு சத்துகள் நிறைந்தது.உப்பு சேர்த்து அவித்து சாப்பிட்டால், பசி ஏற்படாது. குழந்தைகளுக்கும் கொடுக்கிறோம். ஒரு சில கண்மாய், வயல்களில் மட்டுமே கொட்டிக்கிழங்கு கிடைக்கும். இடையமேலுார் மம்மரகால் கண்மாயில் கிழங்கு விளைந்துள்ளதால் தோண்டி எடுக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
No comments:
Post a Comment