ஏழு மாத குழந்தை பலாத்காரம்: இளைஞனுக்கு தூக்கு
Added : ஜூலை 21, 2018 23:23
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், ஏழு மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த, 19 வயது இளைஞனுக்கு, துாக்கு தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார்.இந்த மாநிலத்தில், மார்ச் மாதம் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு, துாக்கு தண்டனை விதிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு, அது சட்டமாக்கப்பட்டது. இந்நிலையில், சிகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர், தங்கள், ஏழு மாத குழந்தையை, உறவினர் வீட்டில் விட்டு, வெளியே சென்றனர். மீண்டும் குழந்தையை அழைத்து செல்ல வந்தபோது, பக்கத்து வீட்டு நபர், குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருப்பதாக கூறினர். அப்போது, உறவினரின் வீட்டிலிருந்து சற்று தொலைவில் உள்ள மைதானத்தில், குழந்தை அழுதபடி இருந்தது. அதிர்ச்சி அடைந்த பெற்றோர், அதை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்தில், அந்த குழந்தை, பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானது தெரிய வந்தது.இதையடுத்து, இந்த கொடூரத்தை செய்த, 19 வயது இளைஞனை, போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அவன் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனது.இந்த வழக்கை, 13 விசாரணைகளில் முடித்த, சிறப்பு கோர்ட், குற்றவாளிக்கு துாக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.ராஜஸ்தானில், பாலியல் பலாத்கார குற்றங்களுக்கான புதிய சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், முதல் முறையாக இந்த வழக்கில் தான் துாக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன், கடந்த ஆண்டு டிசம்பரில், ம.பி., மாநிலத்தில் இதே போன்ற சட்டம் இயற்றப்பட்டது. மைனர்களை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக, நம் நாட்டில் இதுவரை, மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment